வணிகம்

இந்தியாவில் 28 கோடி மக்கள் மீது ரூ.4.8 லட்சம் கடன்!

வீட்டில் இருக்கும் AC, Fridge, TV என அனைத்தும் மாத தவணையில் வாங்கி, அதனை சரிவர கட்ட முடியாமல் கடனாளிகளாக இருப்பவர்கள் தான் இங்கு அதிகம். ஆனால் இந்தியாவில் 28 கோடி மக்கள் மீது சராசரியாக ரூ.4.8 லட்சம் கடன் உள்ளது என்றால் நம்ப முடியுமா?

140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், ஒருவரின் சராசரி ஆண்டுவருமானம் ரூ.1.8 லட்சம் மட்டுமே. அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களில் மாத வருமானம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தான். நடுத்தர மக்களாக இருக்கும் நாம் அனைவருக்கும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் ஆசை. அந்த ஆசையை பயன்படுத்து பெரிய நிறுவனங்கள் மாத தவணை என்ற பெயரில் நம்மை கடனாளிகளாக மாற்றி விட்டன.

28

மாத தவணையில் வாங்கி கட்ட முடியாமல் கடன்களில் சிக்கிக்கொள்வதுடன், அதனைத் தவிர்க்க தங்கள் வருமானத்தை உயர்த்தும் முயற்சியாக, பெர்சனல் லோன், பிசினஸ் லோன் போன்றவற்றையும் எடுத்து வருகிறார்கள்.

சமிபத்தில் கிரெடிட் தகவல் நிறுவனமான சிபில் வெளியிட்ட தகவலின்படி, 2024 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையின் சுமார் 20%. 2023-ல் ரூ.3.9 லட்சமாக இருந்த சராசரி தனிநபர் கடன், தற்போது ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை உயர் கிரெடிட் மதிப்பெண் உள்ள நபர்களுக்கே வழங்கப்பட்டவை.

குடும்ப நிதி சொத்து மற்றும் G.D.P ஆகியவற்றின் அடிப்படையில், தனிநபர் நிதி நிலை மற்றும் நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பீடு செய்யலாம். அதன்படி, 2024-ல் 103.5% இருந்து 106.2% ஆக உயர்ந்துள்ளது. இது மக்கள் நிதி நிலை மேம்படுவதை காட்டுகிறது.

28

இந்திய குடும்பங்கள் அதிகமாக சேமித்து, ரியல் எஸ்டேட், பங்குகள் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இருப்பினும், குடும்பங்களின் மொத்த கடன் சுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, நிதி ரீதியாக கவனமாக நடந்து கொள்வது அவசியம்.

Related Posts