கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தின் புதிய அத்தியாயமாக kotharidigital.in என்ற வெப்சைட்டை , இந்நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது இன்று துவக்கிவைத்தார். துவக்க விழாவில் நியூஸ் தமிழ் 24 X 7 சேனலின் தலைவர் சகிலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், KICL நிறுவனத்தின் ஆலோசகர் ஜெயந்த்முரளி, IPS (Rtd) மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உரம், கல்வி, டெக்னாலஜி, ட்ரோன் பயிற்சி மையங்கள், Non Leather shoe தொழிற்சாலை மற்றும் ”உணா வில்லா” சங்கிலித்தொடர் (chain of hotels) ரெஸ்டாரென்ட்டுகள்.. என பல்வேறு துறைகளில் KICL நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இந்நிலையில், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் (KICL) தற்போது மீடியா துறையிலும் கால் பதித்து, தனது பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி, கோத்தாரி டிஜிட்டலின் யூடியுப் சேனல், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், த்ரெட் ஆகிய சமூகவலைத்தள பிரிவுகள் துவங்கப்பட்டன. கோத்தாரி டிஜிட்டல் யூடியுப் சேனல் 1,60,000க்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து, கோத்தாரி டிஜிட்டல் மக்கள் மனத்தில் தடம் பதித்துவருகிறது. இந்நிலையில், இப்போது கோத்தாரி டிஜிட்டல் வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது. பொது, கல்வி, பிசினஸ், பொழுதுபோக்கு, விளையாட்டு, இலக்கியம், தொழில்நுட்பம் உட்பட்ட பல வகையான செய்திகள், கட்டுரைகள் கோத்தாரி டிஜிட்டல் வெப்சைட்டில் இனி வெளிவரவுள்ளன.









