வணிகம்

இந்தியாவில் முதல்முறையாக Startup-களுக்கான Dashboard!

இந்தியாவில் முதல்முறையாக, ஐஐடி மெட்ராஸ் மற்றும் Guidance Tamil Nadu இணைந்து, மாநில அளவிலான Startup-களுக்கான டேஷ்போர்டாக “INNOVATION-TN” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளம் தமிழ்நாட்டின் Startup குறித்து முழுமையான தகவல்களை வழங்குவதுடன், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு, இங்குள்ள கண்டுபிடிப்புத் திறனை காட்ட உதவுகிறது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ₹200 கோடிக்கு மேல் முதலீடு பெற்ற 45 முன்னணி Startupகள், 228-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர்கள் மற்றும் Startup செயல்பாட்டு மையங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். தற்போது தமிழ்நாட்டில் சுமார் 19,000 Startup நிறுவனங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து 2.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், ₹1,20,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை இது கொண்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “INNOVATION-TN தளத்தின் துவக்கம், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தொழில்முனைவோர் மற்றும் Startup நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழலை வலுப்படுத்தவும் உதவும். பெருநகரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் Startup நிறுவனங்களை அதிகரிப்பதோடு, மேம்பட்ட உற்பத்தி மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டை தேசிய அளவில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே நமது இலக்கு” என்றார்.

Related Posts