எங்களைப் பற்றிசிறப்பு கட்டுரைகள்தொழில்தொழில்நுட்பம்வணிகம்

ஆப்பிளின் புதிய அறிமுகங்கள்: Foldable iPhone முதல் புதிய AirPods வரை

கலிபோர்னியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிளின் நிகழ்வில், புதிய தலைமுறை iPhone, Apple Watch மற்றும் AirPods உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய iPhone ஆன iPhone Duo அறிமுகம், இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

iPhone-ஐத் தொடர்ந்து, iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max, Apple Watch Series 12, Apple Watch Ultra 4 மற்றும் AirPods 5 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, கேமரா தொழில்நுட்பம், உடல்நலக் கண்காணிப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் புதிய மேம்பாடுகளுக்கு ஆப்பிள் முக்கியத்துவம் அளித்துள்ளது.

மடிக்கக்கூடிய iPhone Duo
ஆப்பிள் தனது முதல் foldable iPhone-ஐ iPhone Duo என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தகம் போன்று திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் 7.6 இன்ச் உள்ளக display மற்றும் 5.4 இன்ச் வெளிப்புற display இடம்பெற்றுள்ளன.
Titanium உடல் அமைப்பு மற்றும் precision hinge ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய A20 Pro chip மற்றும் 12GB RAM உடன் இயங்கும் இந்த iPhone-ல் இரண்டு 48 மெகாபிக்சல் Fusion rear cameras இடம்பெற்றுள்ளன.

Face ID-க்கு மாற்றாக side button-ல் Touch ID வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், physical SIM card இல்லாமல் eSIM மட்டுமே செயல்படும் வகையில் இந்த iPhone வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் iPhone Duo-வின் ஆரம்ப விலை Rs 2,99,900.

iPhone 18 Pro வரிசை

ஆப்பிள் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை புதிய A20 Pro chip மூலம் இயங்குகின்றன. கேமரா பிரிவில் variable aperture வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேமராவுக்குள் செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தி, வெவ்வேறு சூழல்களில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

இந்தியாவில் iPhone 18 Pro-வின் ஆரம்ப விலை 1,64,900 ரூபாய், iPhone 18 Pro Max-ன் ஆரம்ப விலை 1,79,900 ரூபாய்.

Apple Watch-ல் உடல்நலக் கண்காணிப்பு

Apple Watch Series 12 மற்றும் Apple Watch Ultra 4 ஆகியவை புதிய S11 chip உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட sensors மூலம் இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நலத் தகவல்களை தொடர்ந்து கண்காணிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள Readiness Score, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் உடல்நிலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அன்றைய தினத்திற்கான உடல் தயார்நிலையை மதிப்பிடுகிறது.

Apple Watch Ultra 4-ல் battery performance-க்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண பயன்பாட்டில் 50 மணி நேரம் வரையிலும், Low Power Mode-ல் 84 மணி நேரம் வரையிலும் battery life கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Sound Recognition, Live Rewind மற்றும் Siri Recap போன்ற AI சார்ந்த வசதிகளும் புதிய Apple Watch-ல் இடம்பெற்றுள்ளன.

புதிய AirPods 5
ஆப்பிள் தனது புதிய AirPods 5-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. Open-ear design, Adaptive EQ, Live Translation மற்றும் Active Noise Cancellation போன்ற வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் AirPods 5-ன் ஆரம்ப விலை Rs 14,900.

AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள்
புதிய தயாரிப்புகளுடன், software பிரிவிலும் ஆப்பிள் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. iOS 27 மூலம் ஒரே நேரத்தில் இரண்டு apps-ஐ பயன்படுத்தும் Split View போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களில் Siri மற்றும் பிற AI செயல்பாடுகளிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயனர் தனியுரிமை மற்றும் on-device processing ஆகியவற்றை ஆப்பிள் தொடர்ந்து முக்கிய அம்சங்களாக முன்னிறுத்துகிறது.

இந்திய சந்தையில் விலை முக்கிய அம்சம்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் இந்தியாவில் premium price segment-ல் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, iPhone Duo-வின் Rs 2,99,900 ஆரம்ப விலை, இந்திய சந்தையில் foldable smartphone பிரிவில் ஆப்பிளின் positioning-ஐ வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிகமாக இருப்பதற்கு இறக்குமதி வரிகள் மற்றும் distribution செலவுகள் உள்ளிட்ட காரணிகளாகும்.

மொத்தத்தில், ஆப்பிளின் 2026 செப்டம்பர் அறிமுகங்கள், foldable technology மற்றும் AI முதல் health monitoring மற்றும் wireless audio வரை பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, iPhone Duo அறிமுகம், ஆப்பிளின் smartphone வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

Related Posts