வணிகம்

தொழில் துறை அமைச்சருடன் நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை

தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கீர்த்தனா, Agnikul, Shree Cements, RGE, Sify மற்றும் AMCHAM India உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்கால முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது.

மேலும், அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது, புதிய முதலீடுகளை ஈர்ப்பது, புதுமைகளை ஊக்குவிப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

இதில் தமிழக அரசு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற, நிலையான மற்றும் வெளிப்படையான தொழில் சூழலை தொடர்ந்து வழங்கும் என்று
அமைச்சர் கீர்த்தனா உறுதி அளித்தார். மேலும், புதிய முதலீடுகளை ஊக்குவித்து, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

Related Posts