இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி இப்போது உணவக பிசினஸிலும் அடியெடுத்து வச்சிருக்காரு. அவருடைய உணவகத்தில் விற்கபடும் உணவுகளும் அதன் விளையும்தான் இப்போ பலரால் பேசப்படுகிறது.
மும்பையின் பிரபலமான பகுதியான ஜூகு விராட் கோலி தனது “ஒன் 8 கம்யூன்” உணவகத்தை நடத்திவருகிறார். பல முக்கிய பிரபலங்களின் ஃபேவரைட் இடமாக இருந்த உணவகத்தில் என்னென்ன உணவுகள் தனித்துவமா விற்கபடுதுன்னு பலருக்கு ஆர்வமா இருந்தது.
விராட் கோலி சைவ உணவு முறைய ஃபாலோ பண்ணாலும், அவருடைய உணவகத்துல அசைவம் ரொம்ப பிரபலம். குறிப்பா கடல் உணவுகள் இங்க ரொம்ப பிரபலமாக இருக்கிறது. இந்த உணவகத்துல வெறும் வெள்ளை சாதம் 318 ரூபாய்.. பிரியாணி 918 ரூபாய்… French fries 348 ரூபாய்.. ஒரு ஸ்பெஷல் மட்டன் உணவு 2,318 ரூபாய்..

செல்ல பிராணிகளுக்கு என 818 ரூபாய்க்கு தனி உணவுகள் விற்கப்படுகிறது. இந்த விலைப்பட்டியல் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, விராட் கோலியின் ஃபேவரைட் உணவுகள் எல்லாம், “VIRAT FAVOURITES” என தனியாக விற்கப்படுகிறது. டோஃபு, மஷ்ரூம், சூப்பர் புட் சாலட் ஆகியவை இதுல ஸ்பெஷல் உணவா இருக்கிறது.
என்னதான் விராட் கோலியா இருந்தாலும் ஒரு பிரியாணி 918 ரூபாயானு எல்லாரும் தங்களுடைய கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.









