வணிகம்

உற்பத்திச் செலவு உயர்வு சவாலாக இருந்தாலும் தேவை வலுவாக உள்ளது: சியட் தலைவர்

டயர் உற்பத்தி நிறுவனமான சியட் (CEAT), 2026-27 நிதியாண்டில் மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவுகள் உயர்வது சவாலாக இருந்தாலும், வாகனத் துறையில் நீண்டகால வளர்ச்சிக்கான காரணிகள் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் எச்.வி. கோயங்கா (H.V. Goenka) வெளியிட்டுள்ள 2025-26 நிதி ஆண்டின் அறிக்கையில், “உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பது மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வலுவான நிதிநிலை, ஆரோக்கியமான வணிக அடிப்படைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் கட்டமைப்பு காரணிகள் ஆகியவை இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள நம்பிக்கையை அளிக்கின்றன” என்றார். 

“2026-27 நிதியாண்டை நிறுவனம் நம்பிக்கையுடனும், அதே நேரம் கவனமுடனும் எதிர்கொள்வதாக”, நிறுவனத்தின் துணை தலைவர் ஆனந்த் கோயங்கா குறிப்பிட்டார்.

 “இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன உரிமையாளர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உயர்தர டயர்களுக்கான வாடிக்கையாளர்களின் விருப்பம் (Premiumisation) ஆகியவை வாகன தேவையை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவை அனைத்தும் டயர் சந்தையின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும், என்று அனந் கோயங்கா குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆர்பிஜி (RPG) குழுமத்தின் நிறுவனமான சியட், தற்போதைய சவால்களை சமாளிக்க செலவுக் கட்டுப்பாடு, விலை நிர்ணய நடவடிக்கைகள் மற்றும் மூலதனத் திறன் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறுகிய கால அழுத்தங்கள் இருந்தாலும், வலுவான சந்தைத் தேவை மற்றும் இந்திய வாகனத் துறையின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுனையாக இருக்கும் என் சியட் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Posts