பருத்தி ஏற்றுமதியில் இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் திருப்பூரில் தற்போது ஒரு முக்கியமான மாற்றம் அமைதியாக உருவாகி வருகிறது.
திருப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வரும் பனியன் கம்பெனிகள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள்தான். முன்பு வேலை இல்லாதவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை தேடுவதுண்டு. இந்தியாவின் பின்னலாடைகளின் தலைநகரம் திருப்பூர். இந்தியாவின் பருத்தி ஆடைகள் ஏற்றுமதியில் சுமார் 90% திருப்பூரிலிருந்துதான் நடைபெறுகிறது. ஆனால் இப்போது polyester, viscose, nylon போன்ற man-made fibres பக்கம் கவனம் திரும்பி வருகிறது. இது இந்திய ஜவுளித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்த மாற்றத்திற்குக் காரணம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார தேவைகளே. மேலும், பருத்தி விவசாயத்தில் லாபம் இல்லாததால், தமிழக விவசாயிகள் அதனை கைவிடத் தொடங்கியுள்ளனர்.

உலகளவில் fashion துறை வேகமாக வளர்ச்சி பெறுகிறது. பருத்தி இயற்கையாக சுவாசிக்கக்கூடியது, குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில்காலத்தில் குளிர்ச்சியாகவும் நம்மை வைத்திருக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக அதன் உற்பத்தி மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற fashion சந்தைகளில், விரைவில் உலர்த்து, சுருக்கமின்றி அணியக்கூடிய ஆடைகள் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகின்றன. இந்த தேவைகளை பருத்தி பூர்த்தி செய்ய முடியாது – காரணம், இது காய அதிக நேரம் எடுக்கும் மற்றும் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
உலகளாவிய ஜவுளிச் சந்தையில் தற்போது 40% க்கும் அதிகம் செயற்கை fibres ஆடைகள் பங்கு வகிக்கின்றன. பருத்தி ஆடைகள் 30% க்கும் குறைவாகவே உள்ளன. Domestic export-ல் 40% முதல் 50% வரை உள்ளது. மேலும் இதன் வர்த்தகம் மதிப்பு 20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளது. Knitwear Capital of India என அழைக்கப்படும் திருப்பூருக்கு இது ஒரு சவாலான சூழல். இந்த புதிய மார்கெட்டை பிடிக்க தவறினால், எதிர்காலத்தில் இந்திய ஜவுளித் துறை பின்தங்கிவிடும். Man-made fibres பக்கம் மாறுவதால், திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும், மேலும் உலக சந்தையில் அதன் நிலை வலுவடையும்.
தற்போது ஜவுளி ஏற்றுமதியில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா. சமீபத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகள் இறக்குமதி வரிகளை உயர்த்தி வருகின்றன. இதனால் அந்த இடத்தை பிடிக்க இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். ஆனால் சீனாவைப் போல தொழில் கட்டமைப்பு, உயர்தர தொழில்நுட்பம் போன்றவற்றுடன் போட்டியிட, திருப்பூரில் புதிய முதலீடுகள், தொழிலாளர்களுக்கான பயிற்சி மற்றும் புதிய இயந்திரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது திருப்பூரின் ஆடை ஏற்றுமதி மதிப்பு 5 Billion டாலர்களாக உள்ளது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் 10 Billion டாலராக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. இந்த வளர்ச்சிக்கு துணி மாற்றம் மட்டும் போதாது. உள்கட்டமைப்பின் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்கள், முதலீடுகள் மற்றும் branding ஆகியவையும் அவசியம் தேவை.
திருப்பூரில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த மாற்றம் வேகமாக நடைபெறுகிறது. இது வெறும் தொழில்துறை மாற்றமல்ல – உலக சந்தையில் இந்தியாவின் புதிய தொடக்கமாகும்.









