நிதிசிறப்பு கட்டுரைகள்

தமிழ்நாட்டில் 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், ஃபீனிக்ஸ் கோத்தாரி, அல்ட்ராவயலட், YKK நிறுவனம் போன்ற இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் பல கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி, மின்னணுவியல், மின்சார வாகனங்கள், செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் ஏராளமான முதலீடுகள் அதிகரித்துள்ளன.

100

பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிற்சாலைகள் தொடங்கி அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திவரும் ஃபீனிக்ஸ் கோத்தாரி, அடுத்ததாக ரூ.1,000 கோடி முதலீட்டில் ராமநாதபுரத்தில் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல் தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் ஏவுகலன் தயாரிப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. அதேபோல், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் ஏவுகலன் தயாரிப்பு வசதியை அமைத்து 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. கிருஷ்ணகிரியில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க அல்ட்ராவயலட் நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.4,476 கோடி முதலீட்டில் 8 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், ரூ.2,676 கோடி முதலீட்டில் 5 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

Related Posts