ஒரு மனிதன் எதை இழந்தாலும் ஈடுகட்ட முடியும் நேரத்தை தவிர. இதில் சீனா நம்மை விட 1000 மடங்கு முன்னேறி இருக்கிறது.
வெறும் 9 மணி நேரத்தில் 1500 வேலையாட்களை வைத்து பியூகேயன் மாகாணத்தில் இருந்த ஒரு ரயில்நிலையத்தை Remodel செய்து, மற்ற நாடுகளுக்கு காலத்தின் முக்கியத்துவம் குறித்து சீனா பாடமெடுத்துள்ளது. தனி மனிதனின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையவும் நேரத்தை சரியாக உபயோகிப்பது மிகவும் அவசியம்.

நேரத்தை சரியாக உபயோகித்ததால்தான் கடந்த 30 ஆண்டுகளில் சீனா அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. சீனா அடைந்த இந்த வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு நம்மிடம் அவ்வளவு காலம் கைவசம் இல்லை.
30 ஆண்டுகளில் சீனா அடைந்த வளர்ச்சியை, வரவிருக்கும் 10 ஆண்டுகளில் இந்தியா எட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. இதை ஒவ்வொரு தனி நபரும் உணர வேண்டும்.
ஒவ்வொரு தனி மனிதனும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முன்னேற்ற பாதையில் தன் பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.
வெறும் 9 மணி நேரத்தில் 1500 வேலையாட்களை வைத்து ஒரு ரயில் நிலையத்தை remodel செய்தது மட்டுமல்ல, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 7 நாட்களில் ஒரு மருத்துவமனையை கட்டி முடித்தது, 29 மணிநேரத்தில் 10 அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டி முடித்தது என தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல நேரங்களில் காலத்தை தன் கட்டுக்குள் சீனா கொண்டுவந்துள்ளது.
சீனாவின் இந்த செயல்களை உலக நாடுகள் சாதனையாக பார்க்க முக்கிய காரணம், காலம் மட்டுமே. அதை நம்முடைய இளைஞர்கள் உணர்ந்து செயல்பட்டால் இந்தியா அசுர வளர்ச்சியை விரைவில் எட்டும் என்று தொழிலதிபர்களும் பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
– பீனிக்ஸ் வாய்ஸ்









