பல தசாப்தங்களாக, நகரத்தின் பொருளாதாரத்தை இயக்கும் என்ஜினாக வடசென்னை இருக்கிறது. அதன் துறைமுகங்களும், தொழிற்சாலைகளும், சேமிப்பு கிடங்குகளும், தளவாட மையங்களும் மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளுக்கு சக்தியூட்டுகின்றன. ஆனால், ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வந்தபோது, அதன் கவனம் OMR, GST சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே விழுந்தது. வடசென்னையோ தொழில்துறையை மட்டுமே சார்ந்து இருந்தது.
இப்போதெல்லாம் நாம் காண்பவை உண்மையை பிரதிபலிப்பதில்லை என G square குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் நம்புகிறார். “வடசென்னை ஏற்கனவே வளர்ந்துவிட்டது. இங்கே உள்கட்டமைப்பும், போக்குவரத்து தொடர்பும், பொருளாதார நடவடிக்கைகளும் ஏற்கனவே ஒரு ஒழுங்கில் இருக்கின்றன. அனால் அது பொது பார்வையில் தெரிவதில்லை” என்கிறார் அவர்.
தொழில்துறையால் இயங்குகிறது..
இந்த மாற்றத்தையும் இப்பகுதியில் வளரும் நம்பிக்கையையும், முதலீட்டாளர்களும் கட்டுமானத்துறையினரும் அடையாளம் காண்கிறார்கள். இந்த சூழலை லாபகரமாக மாற்ற, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் வடசென்னையில் சுமார் ரூ.1000 கோடி முதலீட்டில் 14 திட்டங்களை கொண்டுவர G Square திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரெட் ஹில்ஸ் அருகே உள்ள கரனோடையில் G Square Kshetra என்ற திட்டத்தை இந்நிறுவனம் தொடங்கியது. வளர்ச்சியடைந்துவரும் முக்கிய பகுதிகளில் ஒன்றாக வடசென்னையின் ரெட் ஹில்ஸ் – கரனோடைப் பகுதியை பாலா கருதுகிறார். இப்பகுதியில் ஏற்கனவே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, வெளிவட்டச் சாலை (Outer ring road) அமைந்திருக்கும் நிலையில், புதிதாக அமையவிருக்கும் புறவட்டச் சாலை (peripheral ring road) மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு ஆகியவை இப்பகுதியை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக மாற்றுகிறது.
ஆந்திராவின் வணிக நகரமான ஸ்ரீ சிட்டிக்கு அருகாமையில் இருக்கும் இந்த பகுதியில் ஏற்கனவே முக்கியமான தொழிற்சாலைகள், தளவாட பூங்காக்கள், SIPCOT பூங்கா ஆகியவை இருக்கின்றன. OMR போல தொழில்நுட்ப துறையை மட்டுமே சார்ந்து வளர்ச்சியடையாமல், உற்பத்தி, தளவாடங்கள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் வடசென்னை விரிவடைகின்றது. வளர்ந்து வரும் பல பகுதிகள் தற்போது உருவாக்கிவரும் வேலைவாய்ப்புகளும், நிலையான பொருளாதார அடிப்படையும் இந்த பகுதியில் ஏற்கனவே நிலைத்து இருக்கின்றன. “வடசென்னை OMR போன்றோ அல்லது அதைவிட சிறப்பாகவோ மாறும்” என பாலா திட்டவட்டமாக கூறுகிறார்.
அடுத்த வளர்ச்சி பகுதி
அடுத்த முக்கிய வளர்ச்சிப் பகுதியாக வட சென்னை உருவெடுக்கும் நிலையில் இருப்பதாக அனராக் பிராபர்ட்டி கன்சல்டன்ட்ஸ் (Anarock Property Consultants) நிறுவனத்தின் இயக்குநரும், நகரத் தலைவருமான சஞ்சய் சுக் நம்பிக்கை வைத்துள்ளர். போக்குவரத்து தொடர்பிலும், நிலம் கிடைப்பதிலும் , வேலைவாய்ப்பிலும் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கிறது. “அடுத்த பத்து ஆண்டுகளில் குடியிருப்பு, தொழில்துறை, வணிகம் என பல துறை சார்ந்த ரியல் எஸ்டேட் முதலீடுகளை வடசென்னை ஈர்க்கும்” என அவர் குறிப்பிடுகிறார்.
பல ஆண்டுகளாக இப்பகுதியின் சமூக கட்டமைப்பு ஒரு தடையாக கருத்தபட்டது; ஆனால் அந்த பார்வை உண்மையை பிரதிபலிக்கவில்லை என கூறி பாலா பொது பார்வையை மறுக்கிறார். வேலம்மாள் போன்ற கல்விநிறுவனங்கள், RMK போன்ற பொறியியல் கல்லூரிகள் அப்பகுதியில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றுக்கான சூழலை உருவாகியுள்ளன” என பாலா சுட்டிக்காட்டுகிறார். வளரும் தொடர்புகளும் பொருளாதார நடவடிக்கைகளும் சேர்ந்து வடசென்னை குறித்த பார்வையை வீடு வாங்குபவர்களிடமும் முதலீட்டாளர்களிடமும் மாற்றியுள்ளது.
கட்டுப்பிடியான விலை
மற்றொரு சாதகமான காரணியாக கட்டுப்பிடியான விலை (Affordability) அமைகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பல தெற்கு புறநகர் பகுதிகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், வடசென்னை பகுதிகள் அவற்றை ஒப்பிடும்போது குறைந்த அளவில் இருக்கின்றன. முழு வளர்ச்சியை இந்த பகுதி அடையும் முன்னரே, மிக பெரிய வளர்ச்சியடையப்போகும் இப்பகுதில் நிலமோ வீடோ வாங்குவதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நிச்சயமாக முதலீடு செய்யப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக வடசென்னை வளர்ந்து வருகிறது. இனி தூரத்தில் நின்று பார்க்கும் சந்தையாக இல்லாமல், ஒரு வளர்ச்சி நிதானமாக நடந்துகொண்டிருக்கும் பகுதியாக வடசென்னை முதலீட்டாளர்களுக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் மாறியுள்ளது.
(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)









