வணிகம்

தங்கமயில் ஜூவல்லரி சென்னையில் 2 புதிய கிளைகளைத் திறந்தது

சென்னை, ஆகஸ்ட் 24: தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் முகப்பேர் மேற்கு மற்றும் புரசைவாக்கத்தில் இரண்டு புதிய ஷோரூம்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி திறந்தது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள கடைகளின் எண்ணிக்கை 66-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

முகப்பேர் மேற்கு ஷோரூம் 6,270 சதுர அடி பரப்பளவிலும், புரசைவாக்கம் ஷோரூம் 8,746 சதுர அடி பரப்பளவிலும் அமைந்துள்ளன. நவீன வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய கடைகளின் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய ஷோரூம்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் பல்வேறு தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. திருமண நகைகள், பண்டிகை கால நகைகள், அன்றாடப் பயன்பாட்டுக்கான நகைகள், பரிசளிப்பு மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான நகைகள் என பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
திறப்பு விழாவில் பேசிய தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் பா. ரமேஷ், “சென்னை எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். புதிய ஷோரூம்கள் மூலம் சிறந்த கைவினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த சேவையுடன் கூடிய நகை ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம்” என்றார்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் ஜூவல்லரி, 2007ஆம் ஆண்டு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. 2010ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 66-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு பரப்பளவு சுமார் 1.49 லட்சம் சதுர அடியாக உள்ளது.

Related Posts