தொழில்நுட்பம்

இந்திய சாலைகளில் Tesla! எலெக்ட்ரிக் கார் சந்தையில் அனல் பறக்கும் போட்டி!

இந்தியாவின் மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது Tesla நிறுவனம்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலோன் மஸ்க். இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் Tesla ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்களின் வெற்றிதான் அவரை உலக அளவில் உச்சிக்கு கொண்டு சென்றது. ஆட்டோமொபைல் துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லாவில் தானியங்கி (Autonomous) தொழில்நுட்பம், Minimalistic Design, Bioweapon Defense Mode போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. தற்போது Tesla நிறுவனம் உலகம் முழுவதும் 438 மேற்பட்ட ஷோரூம்கள் வைத்துள்ளது.

Tesla

அதனை தொடர்ந்து, மும்பையின் மேற்கு குர்லா பகுதியில் இந்தியாவில் முதல் Tesla ஷோரூமை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று திறந்து வைத்தார்.

Tesla

இந்த ஷோரூமில் டெஸ்லாவின் மின்சார கார் Model Y விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ₹59.89 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு தற்போது இறக்குமதி வரியாக 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளன. இதன் காரணமாக, Tesla கார்களின் விலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

Related Posts