வணிகம்

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ஆப்பு… இந்திய அணியின் New Sponsor?

Dream11, My11Circle, WinZO, Zupee போன்ற சூதாட்ட கேமிங் நிறுவனங்களை சமீபத்தில் இந்திய அரசு தடை செய்தது. ஆன்லைன் சூதாட்டங்களில் இந்தியர்கள் அதிக பணம் இழப்பதாகவும், அதனால் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கூறி, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்ய புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் அமலுக்கு வந்தது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆன்லைன் கேமிங் துறை கடும் சரிவை சந்தித்தது. அதிலும் குறிப்பாக Dream11 நிறுவனம் கடும் நஷ்டத்தில் உள்ளது. தற்போது இந்த நிறுவனம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக உள்ளது. இதன் பெயரும் இந்திய அணியின் ஜெர்சியில் இடம்பெற்றுள்ளது. ஆனால், தற்போது அதிலிருந்து BCCI விலக முடிவு செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டு, இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக Dream11-ஐ பிசிசிஐ ஒப்பந்தம் செய்தது. 2023 முதல் 2026 வரை மூன்று வருட காலத்திற்கு ரூ. 358 கோடிக்கு அந்த ஒப்பந்தம் செய்யபட்டது. இதுமட்டுமின்றி ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக My11Circle, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் 2028 வரை ரூ.625 கோடியை ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், இந்த தடைச் சட்டத்தை அரசு நிறைவேற்றிதால் Dream11-உடனான ஒப்பந்தத்தை நிறுத்துவதாக BCCI அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் BCCI ஒப்பந்தம் செய்யாது என BCCI செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

வருடா வருடம் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மூலம் ரூ. 5,000 கோடிகளுக்கு அதிகமான வருமானம் ஈட்டிவரும் BCCI, அந்த வருமானம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஆசிய கோப்பை செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குவதால், அதற்குள் புதிய ஸ்பான்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Related Posts