வணிகம்

இரண்டாக பிரியும் TATA MOTORS: தேதி அறிவிப்பு

இந்தியா ஆட்டோ மொபைல் துறையின் முன்னணி நிறுவனமான TATA MOTORS, இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிப்பதற்கான (Demerger) அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி, பயணிகள் வாகனங்கள் (Passanger Vechile) மற்றும் வர்த்தக வாகனங்கள் (Commercial Vechile) என இரண்டு தனித்தனி பிரிவுகளாக அக்டோபர் 1, 2025 முதல் பிரிக்கப்படவுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரிவுக்குப் பிறகு, trucks, tippers, pickups, tractors போன்றவை டாடா மோட்டார்ஸின் Commercial Vechile பிரிவில் அடங்கும். அதே சமயம், Tata Tiago, Tata Punch, Tata Harrier போன்ற பயணிகள் வாகனங்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் Jaguar Land Rover (JLR) ஆகியவை Passanger Vechile பிரிவில் சேர்க்கப்படுகின்றன. இந்த இரு புதிய நிறுவனங்களுக்கும் தனித்தனித் தலைவர்களை அறிவித்துள்ளது TATA நிறுவனம்.

கிரீஷ் வாக், Commercial Vechile பிரிவின் இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் அக்டோபர் 1 முதல் பொறுப்பேற்கிறார். சைலேஷ் சந்திரா, Passanger Vechile பிரிவின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் அதே தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக TATA MOTORS நிறுவனம் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. இருப்பினும், இந்த Demerger மூலம் நிர்வாக மாற்றம் ஏற்பட்டு லாபம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts