தொழில்நுட்பம்

தாஜ்மஹாலின் பாதுகாப்பை பலப்படுத்த டிரோன் எதிர்ப்பு அமைப்பு

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட உள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டபோது, இந்தியாவின் ராணுவ தளங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பொற்கோவில், தாஜ்மஹால் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏ.சி.பி சையத் அரிப் அகமது கூறியதாவது:
“தாஜ்மஹால் வளாகத்தில் டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும். இது 7 முதல் 8 கிலோமீட்டர் வரம்பிற்குள் செயல்படும். தற்போது, இந்த அமைப்பு பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்குகிறது. ஏதேனும் டிரோன் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால், அதன் சிக்னல்களை இது கண்டறிந்து தானாகவே ஜாம் செய்து செயலிழக்கச் செய்யும்.”

நாட்டின் பெருமைமிகு சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு, வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த இடத்தில், தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் உள்ள நவீன பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தாஜ்மஹாக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக, அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts