பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், நமது குழந்தைகள் முதலில் எடுப்பது மொபைல் போன் தான். அவர்கள் பயன்படுத்தும் ஆப்கள் பாதுகாப்பானதா? என்பது அனைத்து பெற்றோர்களின் கேள்வி. சமீபத்தில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு நிகழ்வு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ‘X’ தளத்தில் மூலம், ‘Grok AI’ எனும் AI ChatBot-ஐ எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். ChatGPT போன்ற இதையும் பலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், சமீபத்தில் ‘Grok AI’ குறித்து சில புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, Kids Mode ஆக்டிவாக இருந்தபோதும், சில சமயம் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஏற்ற Adults Only தகவல்களை குழந்தைகளுக்கு காட்டியதால் சில பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனை பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர். இது பெரும் சர்ச்சை ஆனது.

இந்த சர்ச்சையினை தொடர்ந்து, குழந்தைகளுக்கேற்ப ஒரு புதிய ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “நாங்கள் எக்ஸ் ஏஐ மூலம் ‘பேபி கிராக்’ எனும் செயலியை உருவாக்க உள்ளோம். இது குழந்தைகள் பயன்படுத்தும் வகையில், பாதுகாப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். Grok AI பெரியவர்களுக்கேன பிரத்தியேகமாக உருவக்கபட்டது. இந்த Baby Grok குழந்தைகளை வகையும் உருவாக்கப்படவுள்ளது.
‘Baby Grok’ சிறப்பம்சங்கள்:
இது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையாக புரியும் வகையில் பதிலிக்கும். கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த தகவல்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும். தவறான மற்றும் 18 வயதிற்க்கு மேற்பட்ட தகவல்களைத் தடுக்க பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் அமைக்க உள்ளது. மேலும் கதைகள், விஞ்ஞானம், கணிதம் போன்ற பகுதிகள் இதில் இடம்பெற்றிருக்கும்.









