தொழில்நுட்பம்

இந்தியாவின் எதிர்காலம் Liveness Check தொழில்நுட்பம்: ரஃபீக் அகமது

பயோமெட்ரிக் மற்றும் AI தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான Kaizen Secure Voiz Pvt. Ltd., தனது புதிய Vision Tech & Liveness Check தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஜே.ரஃபீக் அகமது, ஆலோசகர் ஜெயந்த் முரளி, ஐ.எப்.எஸ் அதிகாரி டாக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜே.ரஃபீக் அகமது, “இந்த தொழில்நுட்பம் பயன்படுத்த மிகவும் எளிமையானது. வங்கியாளர்கள் மட்டுமின்றி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் இது பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில்  வெற்றிகரமாக செயல்படும் இத்தொழில்நுட்பம் இந்தியாவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இந்தியாவின் எதிர்காலம் Liveness Check தொழில்நுட்பம் தான்.

ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், அவர்களுக்கு 45 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, பின்னர் சான்றிதழ்கள் வழங்கியது. மேலும், J.R.ONE கோத்தாரி நிறுவனத்தில் 6 மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்த தொழில்நுட்பம் அவர்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

Kaizen Secure நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிகரித்து வரும் மோசடிகளில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், சரிபார்ப்புகளை விரைவாக செய்து முடிக்கவும் contactless verification முறையை அறிமுகம் செய்துள்ளது. இது face recognation தொழில்நுட்பம் மற்றும் Liveness Detection-ஐ கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Kaizen Voiz பயோமெட்ரிக் என்ஜினானது மூக்கு, கண்கள், வாய், கண்ணம் ஆகியவற்றின் ஆகியவற்றை வைத்து முகத்திற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குகிறது. இந்த வரைபடத்தை வைத்து முகத்திற்கான  template யும் உருவாக்குகிறது.

கண்ணை சிமிட்டுதல், சிரித்தல், தலையை அசைத்தல் போன்றவற்றின் வழியாக மனித உருவத்தின் உயிர்ப்பு தன்மையையும் சோதனை செய்கிறது. புகைப்படங்களையோ பொம்மைகளையோ வைத்து மோசடி செய்யப்படாமல் இது தடுக்கிறது.

இந்த வகையிலான Liveness Check மிகக் குறுகிய நேரத்தில் மிக விரைவாகவும் மிகத்துல்லியமாகவும் அடையாளச் சரிபார்ப்புகளை செய்ய உதவுகிறது.

வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், விமான நிலையங்கள், தேர்வு மையங்கள் போன்ற இடங்களுக்கு தேவையான அடையாள சரிபார்ப்புகளை செய்ய இந்த பயன்படக்கூடியது.

Related Posts