VDart நிறுவனத்தின் தலைவரும், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருமான சித் அகமது (Sidd Ahamed), சமீபத்தில் கோத்தாரி இண்டஸ்ட்ரிஸ் கார்ப்பரேஷன் (KICL) நிறுவனத் தலைவர் ரஃபீக் அகமதுவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து “Meet the Transformer” எனும் தலைப்பில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பெரம்பலூர் குறித்த ஒரு வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அந்த வீடியோவில் சொல்லப்படும் பெரம்பலூரை மாற்றியமைத்தவர் இவர்தான் எனவும் சொல்லி KICL சேர்மன் ரஃபீக் அகமதுவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பெரம்பலூரில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவி, பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி, அந்த ஊரையே மாற்றியமைத்தவர், வேறு எவருமில்லை நம் ரஃபீக் அகமதுதான் என புகழ்ந்துள்ளார். அந்த தொழிற்சாலையில் தற்போது 2,000 பேர் வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள், மருமகள் என ஒட்டுமொத்தமாக தொழிற்பயிற்சி பெற்று வேலைக்கு செல்வதால், ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 1 லட்ச ரூபாய் வரை அடைவதாகவும், இது அந்த ஊர்மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
சித் அகமது, “உங்களின் அடுத்த திட்டம் என்ன?” என கேட்டதற்கு, புன்னகையுடன் பதிலளித்த ரஃபிக் அகமது, கரூரில் Adidas தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும், அதன் மூலம் 15,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனக் கூறியுள்ளார்.









