வணிகம்

RBI அறிவித்த Rate cut… குறையப் போகும் EMI.!

இன்று முடிந்த RBI Monetary Policy Committee கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 5.25% ஆக மாற்றியுள்ளது. இது சாமானிய மக்கள், வீட்டு கடன் பெறுபவர்கள், MSME நிறுவனங்கள் போன்ற கோடிக்கணக்கான மக்களின் கடன் வட்டி குறையும்.

ஏன் RBI விகிதம் குறைத்தது?

2025ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவின் GDP 8.2% வளர்ச்சியடைந்துள்ளது. இருந்தாலும், அக்டோபர் 2025ல் இந்தியாவின் பணவீக்கம் 0.25% குறைந்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் 2% முதல் 6% வரை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவின் பணவீக்கம் 2%-த்திற்கும் குறைவாக உள்ளது.

இந்த வளர்ச்சியும் பணவீக்கமும் காரணமாகவே RBI ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் குறையும்போது EMI குறையும் அல்லது கடன் செலுத்தும் கால அவகாசம் குறையும். உதாரணமாக, 40 லட்சம் ஹோம் லோன் எடுத்திருந்தால், ரெப்போ விகிதம் 0.25% குறையும்போது EMI ரூ.600 – ரூ.800 வரை குறையலாம். இதனால் வருடத்திற்கு சுமார் ரூ.12,000 வரை சேமிப்பு கிடைக்கும்.

யாருக்கு அதிக பலன்?

வீட்டு கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், MSME கடன் போன்ற அனைத்து வகை கடன்களுக்கும் வட்டி விகிதம் குறையும். ஆனால் சிலருக்கு இதனால் பாதிப்பும் இருக்கிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் FD மற்றும் RD வழங்கும் வட்டியும் குறைய வாய்ப்பு அதிகம். இதனால் சேமிப்பாளர்கள் மாற்று முதலீட்டு தேடுகின்றனர்.

Related Posts