வணிகம்

ரியல் எஸ்டேட், தங்கத்தில் இல்ல… பிரதமர் மோடியின் முதலீடு Secret…

நம்ம நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தங்கம், பங்கு சந்தை, ரியல் எஸ்டேட்னு எதையும் அதிகம் நம்பவில்லை. நரேந்திர மோடி சேமிப்பு பெரும்பாலும் FD மற்றும் National Savings Certificate-களில் தான் அதிகமாக இருக்க தகவல் இப்போ இனையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கம், பங்கு சந்தை போன்றவை நிலையாக இல்லாமல் — ஒரு நாள் ஏற்றமும், ஒரு நாள் இறக்கமும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஆபத்து இல்லாத முதலீடு எனக் கருதப்படுவதால், FD மற்றும் சேமிப்பு திட்டங்களில் அதிகமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் இதே முறையில் தான் பெரும்பாலும் முதலீடு செய்துள்ளார்.

அவரது கையில் வெறும் ரூ.59,920 பணம் தான் இருக்காம். மோடி வங்கி FD-களை அதிகம் முதலீடுகளை செய்துள்ளார். அதில் அவர் ரூ.32,634,258 வைத்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக சுமார் ரூ.220,218 கிடைக்கிறது. இதைத் தவிர National Savings Certificate-களில் ரூ.974,964 முதலீடு செய்துள்ளார். இது ஆண்டுக்கு 7.7% வட்டி தரக்கூடிய தபால் அலுவலகத் திட்டம்.

தங்க நகைகளில் பார்த்தால், அவர் 45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.310,365. பங்குகள்? Mutual Funds? Bonds? போன்றவற்றில் அவர் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவில்லை.

2014 தேர்தலில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.65 கோடி. 2019 தேர்தலில் ரூ.2.51 கோடி. 2024 இல் ரூ.3.02 கோடி. தற்போது மொத்தம் ரூ.3.43 கோடி. அதாவது கடந்த 11 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு Double ஆகியுள்ளது.

இந்த தகவலின் மூலம், இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான சேமிப்பு முறையாக FD மற்றும் Savings Schemes கருதப்படுகின்றன. மோடியைப் போல FD & சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான வழின்னு பலரும் இணையத்தில் கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts