பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்யூட்’ (Dude) திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் வாங்கியுள்ளது.
கோமாளி படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, லவ் டுடே மற்றும் டிராகன் படத்தில் கதாநாயகனாக களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன், இப்போது ரன்லவ் இன்சூஸ் கம்பெனி (LIK) மற்றும் ட்யூட் (Dude) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் ரன்லவ் இன்சூஸ் கம்பெனி திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் காம்போ ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன், பிரதீப் ரங்கநாதனை வைத்து ட்யூட் படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்னதாகவே வணிக ரீதியாக லாபமடைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ரூ.25 கோடியில் உருவான இந்த படத்தை, அதே விலைக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பதால், படம் வெளியாவதற்கு முன்பே லாபம் உறுதியாகிவிட்டதென மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கொண்டாட்டத்தில் இருக்கிறது.









