டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆக மாறியுள்ளார் Oracle நிறுவனத்தின் Co-founder லேரி எலிசன்.
1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Oracle, உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. Oracle பங்குகள் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக நேற்று மட்டும் பங்கு விலை 43% வரை உயர்ந்தது.
81 வயதான எலிசன், தற்போது Oracle நிறுவனத்தின் Co-founder மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) ஆக உள்ளார். இதுமட்டுமன்றி, அந்த நிறுவனத்தின் சுமார் 41% பங்குகளை எலிசன் வைத்துள்ளார். இதன் விளைவாக, நேற்று மட்டும் அவர் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.89,000 கோடி உயர்ந்தது.
இதன் மூலம் லேரி எலிசனின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலர். மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டாலர். இவ்விருவருக்கும் இடையில் சுமார் 8 பில்லியன் டாலர் வித்தியாசம் உள்ளது. பல நாட்களாக உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்கை முந்தி, லேரி எலிசன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
Oracle பங்குகள் உயர்ந்தது மட்டும் இதற்கு காரணம் மல்ல, Tesla பங்குகள் 2025 இல் இதுவரை சுமார் 14% சரிந்ததும் முக்கிய காரணமாகும்.
தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில்:
லேரி எலிசன் (Oracle)
எலான் மஸ்க் (Tesla, X)
மார்க் ஸக்கர்பெர்க் (Meta)
ஜெஃப் பெஸோஸ் (Amazon)









