இந்தியாவின் Offline மொபைல் போன் விற்பனை தற்போது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் விற்பனை சுமார் 40%த்திற்கும் குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் Flipkart மற்றும் Amazon போன்ற ஆப்களில் தொடங்கிய பண்டிகை கால சலுகைகள் தான். கடைகளை விட ஆன்லைனில் Card Offer, Cashback Offer, Exchange offer என அதிக தள்ளுபடி அள்ளி கொடுக்கின்றது. இதனால் கடைகளை விட ஆன்லைனில் மொபைகளுக்கு 10000 முதல் 30000 வரையில் கூட ஆப்பர் கிடைக்கிறது. இதுவே தற்பொழுது வாடிக்கையாலர்களை ஆன்லைன் ஷப்பிங் அதிகரிக்க காரணம்.
ஆன்லைன் ஆப்கள் iPhone 16 சீரிஸ், Samsung Galaxy S24 FE போன்ற பிரீமியம் மாடல்களுக்கு 30,000க்கும் மேல் கூட தள்ளுபடி விலையில் கிடைத்தது. உதாரணமாக, iPhone 16 அடிப்படை மாடல் ₹51,999 க்கு விற்கப்பட்டது. இது அதன் அறிமுக விலையை விட 35% குறைவானது. இதனால் வாடிக்கையாளர்களின் கவனம் முழுமையாக ஆன்லைனுக்கே திரும்பியது.
இதுகுறித்து இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைலாஷ் லக்யானி கூறுவதாவது, “புதிய மற்றும் டிரெண்டிங் மாடல்கள் ஆன்லைனில் தான் அதிக கிடைக்கின்றன, கடைகளில் பழைய மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. தற்பொழுது மக்கள் அடிகடி தங்களது மொபைல் போனை மாற்றி வருகின்றனர். பழைய மாடல்களை, வாடிக்கையாளர்கள் வங்க விரும்புவது இல்லை”.
ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தலா 2 மில்லியன் யூனிட்களை Online-ல் வழங்கியுள்ளது. மற்ற பிராண்டுகள் அனைத்தும் சேர்ந்து 3–4 மில்லியன் யூனிட்களை கொடுத்துள்ளது. Offline கடைகளில் பிரபலமான மாடல்களின் பற்றாக்குறை, சில்லறை விற்பனையாளர்கள் பழைய ஐபோன் வகைகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், சமிபத்தில் நடந்த GST மாற்றத்தில் மொபைல் போன்களுக்கு விதிக்கப்படும் 18% GST குறைக்கப்படாததால், மொபைல் போன்களின் விலை குறையவில்லை. அதுவும் Offline விற்பனையாளர்களின் சுமையை அதிகரித்துள்ளது. ஆனால், “ஆன்லைன் சரக்கு குறைந்ததும் வாடிக்கையாளர்கள் மீண்டும் கடைகளுக்குத் திரும்புவார்கள். தீபாவளி காலத்தில் விற்பனை இரட்டிப்பு ஆகும்” என Offline விற்பனையாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.









