வணிகம்

UPI-ல் வரப்போகும் அதிரடி மாற்றம்

UPI மூலம் பணம் அனுப்புகிறீர்களா? உங்களுக்காக ஒரு முக்கிய அப்டேட் வந்திருக்கிறது. இனி பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கான வரம்பு உயர்த்துவதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்ப முடியும். ஆனால் இப்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு மொத்தம் ரூ.10 லட்சம் வரை அனுப்ப முடியும். இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.

UPI பரிவர்த்தனை வரம்புகள் வந்த முக்கிய மாற்றம் என்ன?
இனி கிரெடிட் கார்டு பில் செலுத்தும்போழுது ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்; தினசரி வரம்பு ரூ.6 லட்சம் வரை அதிகரித்து இருக்காங்க. EMI செலுத்த ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாவும், நாளொன்றுக்கு ரூ.10 லட்சமாவும் மாற்றி இருக்காங்க. தங்கம் வாங்குவதற்கான வரம்பு முன்பு ரூ.1 லட்சம் இருந்தது, இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சமாகவும், நாளொன்றுக்கு ரூ.6 லட்சம் அனுப்பலாம். வங்கி டெபாசிட் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்; இதற்கு முன்பு ரூ.2 லட்சம் தான் அனுமதி இருந்தது.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. அதாவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வோ, காப்பீட்டு பிரீமியம் அல்லது கடன் தவணை செலுத்துவோ, நகை வாங்குவோ – எல்லாமே சுலபமாகவும், வேகமாகவும் நடக்கும். இதனால் யூபிஐ பயன்படுத்தி பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை சுலபமாக செய்யலாம்.

Related Posts