வணிகம்

பிரபல கார் நிறுவனத்தை வழிநடத்த போகும் முதல் தமிழர்!

ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழகத்தை சேர்ந்த P.B. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு, Tata Motors நிறுவனம், Ford நிறுவனத்திடமிருந்து லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவாரின் முழு உரிமையையும் வாங்கியது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் JLR (Jaguar Land Rover) நிறுவனத்தின் CEO-வாக 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அட்ரியன் மார்டெலின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது.

கார்

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த P.B. பாலாஜிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.

1992-ஆம் ஆண்டு சென்னை IITயில் பொறியியல் பட்டம், அடுத்து கொல்கத்தா IITயில் 1993-ஆம் ஆண்டு மேல்நிலைப் பட்டம்… இன்று ஏர் இந்தியாவிலிருந்து டைட்டன் வரை பல ஆண்டு பாரம்பரியமிக்க நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருக்கிறார்.

இந்த பயணம் ஒன்றும் சாதாரணமானது அல்ல. 1995-ல் யூனிலீவரில் பணியைத் தொடங்கி பாலாஜி, இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், சுவிட்சர்லாந்து என நான்கு நாடுகளில் தலைமை மேலாண்மை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இன்று, Air India, Tata Motors Passanger Vechile, Tata Electric Mobility, Titan, Tata Consumer Products, Agratas (UK) உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் Board Member-களில் ஒருவராகவும் இருக்கிறார்.

இதுகுறித்து P.B. பாலாஜி கூறியதாவது:

“இந்த நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமையான விஷயம். கடந்த 8 ஆண்டுகளில், JLR மற்றும் அதன் பிராண்டுகளை அறிந்து நேசிக்கத் தொடங்கியுள்ளேன். இப்போது, JLR அணியுடன் இணைந்து அதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆவலாக உள்ளேன். அட்ரியனின் பங்களிப்புகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.” என்றார்.

 

Related Posts