வணிகம்

’லோகா’ வசூலில் துல்கரின் சர்பிரைஸ் கிஃப்ட்!

பிரேமலு புகழ் நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ‘லோகா’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இந்த படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தின் பல காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக கல்யாணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. அவர் வரும் ஒரு காட்சியில் இளையராஜாவின் இசையில் உருவான ‘கிளியே கிளியே’ பாடல் பின்னணி இசையாக இருப்பது பலரின் ரசனைக்கு தீனி போட்டுள்ளது.

இந்த திரைப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தை படக்குழு ஹிந்தியிலும் வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.

அதில் பேசிய துல்கர் சல்மான், “படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு புது முயற்சியாக தான் தயாரித்தேன். திரைப்படம் 5 பாகங்களாக உருவாக்க இருந்தோம், இப்பொழுது படத்தின் வரவேற்பை வைத்து அதிகம் எடுக்கலாம் என நினைத்துள்ளோம். படத்தின் லாபத்தை படக்குழுவிற்கு கண்டிப்பாக பகிர்வேன். அவர்களது உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்றார்

Related Posts