வணிகம்

கத்தார் Mobile World Congress-ல் கோத்தாரி…

உலக புகழ்பெற்ற Mobile World Congress (MWC) மாநாடு, கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள Doha Exhibition and Convention Centre (DECC)-யில் நவம்பர் 25–26 ஆம் தேதிகளில் நடைபெற்றது. உலக அளவில் மொபைல், டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளின் மிகப்பெரிய மாநாடாகப் பார்க்கப்படும் இதில் AI, 5G, IoT, Cyber Security, Fintech, Smart Mobility உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த கருத்தரங்குகள் நடைபெற்றன.

Global System for Mobile Communications Association (GSMA) மற்றும் கத்தார் நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MCIT) இணைந்து, கத்தாரை உலகின் முக்கிய டிஜிட்டல் மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் கோத்தாரி நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த மாநாட்டில் கோத்தாரி நிறுவன சார்பில் மூன்று பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. AI, IoT உள்ளிட்ட துறைகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டு, அவற்றை கோத்தாரியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என அவர்கள் ஆலோசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

Related Posts