பேஷன்(Fashion),வடிமைப்பு (Design) மற்றும் தொடர்பு (Communication ) ஆகிய துறைகளை உள்ளடக்கிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை (Deemed University) தமிழ்நாட்டில் அமைக்க கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) முடிவுசெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இத்தாலி நாட்டின் அரசு அங்கீகாரம் பெற்ற ‘அகாடமியா IUAD’ கல்வி நிறுவனத்துடன் KICL புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி உட்பட சில உயர் அதிகாரிகள் முன்னிலையில், கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபிக் அஹமது மற்றும் IUAD தலைவர் மைக்கேல் லெட்டெய்ரிம் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டு முயற்சியில் நிறுவப்படும் இந்த பல்கலைக்கழகத்தில், பேஷன், வடிமைப்பு மற்றும் தொடர்பு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விமுறையில் 30 சதவீதம் மட்டுமே Theory என்றும், மீதமுள்ள 70 சதவீதம் அனுபவ கல்வியாக இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IUAD வின் கல்வி நிபுணத்துவம் மற்றும் KICLன் தொழில் நிபுணத்துவம் இணைந்து, இந்த துறையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட நகரங்களிலிருந்து 1 லட்சம் இளைஞர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி வழங்க, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் UK போன்ற நாடுகளின் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிருப்பதாக , KICL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரஃபிக் அஹமது ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









