வணிகம்

நொய்டாவில் புதிய ஷோரூம்.. அசத்தும் கோத்தாரி நிறுவனம்!

சென்னையை தலைமையிடமாக கொண்ட கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், ஜூலை 12ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் தனது புதிய Kickers ஷோரூமை தொடங்கியுள்ளது.

1970ஆம் ஆண்டு உருவான பிரபல காலணி மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Kickers-ன் ஷூக்களை இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் உற்பத்தி செய்வதிலிருந்து சில்லறை விற்பனை வரையிலான உரிமத்தை கோத்தாரி நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள VR மாலில் இந்தியாவில் தனது முதலாவது Kickers ஷோரூமையும் நிறுவியது. பின்னர், மார்ச் 26ஆம் தேதி, மத்திய கிழக்கு நாடான கத்தாரில் சர்வதேச அளவில் தனது முதல் Kickers ஷோரூமை தொடங்கியது.

இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட Kickers ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நொய்டாவில் உள்ள Mall of India-வில், 783 சதுர அடியில் இந்தியாவில் தனது இரண்டாவது ஷோரூமை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து காலணித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கோத்தாரி நிறுவனத்தின் அடுத்த இலக்கு தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம். உலகளவில் முன்னணி காலணி நிறுவனமான Adidas உடன் இணைந்து, அங்கு புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார்.

Related Posts