வணிகம்

Zodiz, Jeetlo காலணி பிராண்டுகளை இணைத்துக்கொண்டது KICL நிறுவனம்

Zodiz, Jeetlo பிராண்டுகள் மற்றும் அதன் துணை பிராண்டுகளை இணைத்துக்கொண்டது KICL நிறுவனம்

Zodiz, Jeetlo ஆகியவை தமிழ்நாட்டை சேர்ந்த குறைந்த விலையிலான காலணி பிராண்டுகளாகும். இவை மற்றும் இவற்றின் துணை பிராண்டுகளை இணைத்துக் கொண்டதன் மூலம் ரீடெயில் மார்க்கெட்டில் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தனது அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஆகஸ்டு 2 சனிக்கிழமை அன்று KICL நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

KICL நிறுவனம் ஏற்கனவே crocs காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைத்து செயல்பட்டு வருகிறது.

மேலும் kickers காலணிகளை விற்பனை செய்யும் உரிமையை இந்தியா உட்பட 9 நாடுகளுக்கு பெற்றுள்ளது.

தற்போது மலிவு விலையிலான காலணி பிராண்டுகளான Zodiz, Jeetlo ஆகியவற்றை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு மாபெரும் பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளது KICL நிறுவனம்.

இதுத் தொடர்பாக KICL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Zodiz, Jeetlo மற்றும் அதன் தொடர்புடைய துணை பிராண்டுகளை கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கையகப்படுத்தியது ஆகஸ்ட் 4 முதல் அமலுக்கு வருகிறது. இந்த பிராண்டுகள் விலை மற்றும் தரத்தின் அடிப்படையில் பெருவாரியான மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த பிராண்டை சேர்ந்த ஒரு ஜோடி காலணிகள் ரூ. 1,000 க்கும் குறைவாகவே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்த இந்திய காலணி நுகர்வில் கிட்டத்தட்ட 80% இத்தகைய விலையை கொண்டவையே. இது ஆண்டுதோறும் ₹80,000–85,000 கோடி வர்த்தக மதிப்புடையது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வளர்ந்து வரும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களை இலக்காக வைத்து இந்த பிராண்டு காலணிகளின் விற்பனை அமைய உள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பேசிய KICL நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது, “இந்திய காலணி சந்தை ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் நேரத்தில் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இளம் இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் விருப்பங்களுக்கு சேவை செய்வதோடு நீடித்த பங்குதாரர் மதிப்பை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோள்.” எனக் கூறியுள்ளார்.

Related Posts