வணிகம்

‘Kanthara A Legend Chapter-1’… ரூ.1000 கோடி box office listல் சேருமா?

‘Kanthara Chapter-1’ படம் தமிழ்,கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என எழு மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யபட்டு வெளியானது. ரூ.14 கோடி செலவில் எடுக்கப்பட்ட காந்தாரா, ரூ.480 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின், முன்கதையாக (Prequel) ‘Kanthara A Legend Chapter-1’ இப்போது உருவாகி வருகிறது. Kanthara A Legend Chapter-1 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதன் First Look Teaser கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

kanthara 2 

இந்நிலையில் ரிஷப் ஷெட்டியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு ‘Kanthara A Legend Chapter-1’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது .

கன்னடத்தில் KGF 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், காந்தாராவின் முன்தொடர்ச்சி (Prequel) படமாக உருவாகி வரும் ‘Kanthara A Legend Chapter-1’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts