நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, UAE அணியை வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய பவர் பிளே முடிவதற்குமுன்பே வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக முதல் ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியாவின் கையில் இருந்த Watch தான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. காரணம் – அந்த வாட்சின் தனித்துவமும் அதன் விலையும்.
ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.2.6 கோடி மட்டுமே. ஆனால், பாண்டியா அணிந்திருந்த Richard Mille RM 27-04 என்ற வாட்சின் விலை சுமார் ரூ.20 கோடி. அதாவது, பரிசுத் தொகையை விட 8 மடங்கு அதிகம்.
இந்த வாட்சின் தனித்துவம் என்னவென்றால் – இது உலகம் முழுவதும் வெறும் 50 பேரிடம் மட்டுமே உள்ளது. மேலும், முதலில் இந்த மாடல் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்க்காகவே உருவாக்கப்பட்டது. பின்னர் தான் மற்றவர்களுக்காக தயாரிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களுக்கு பிடித்த பொருட்களை சேகரிப்பது (collect) ஒரு ஹாபியாக உள்ளது. உதாரணமாக, தோனி கார்கள், பைக்குகள் என சேகரிப்பார். அதேபோல், பாண்டியாவின் Watch கலெக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
அவர் வைத்திருக்கும் வாட்ச்களின் மதிப்புகள்,
RM 11 Ceramic – ரூ.2.76 கோடி,
RM 67-02 Extra Thin – ரூ.3.9 கோடி,
RM 67-02 Alexis Pinturault Edition – ரூ.3.37 கோடி,
RM 57-05 Eagle Russia – ரூ.10.92 கோடி,
RM 67-02 Automatic – ரூ.11.14 கோடி மொத்தத்தில், பாண்டியாவின் கையில் இருக்கும் Watch கலெக்ஷன் மதிப்பு மட்டும் ஒரு சிறிய IPL அணியை வாங்கும் அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.









