வணிகம்

Fake brokerage ஆப்களில் இருந்து தப்பிக்க செபி அதிரடி ஆக்‌ஷன்!

இந்தியாவில் முதலீடுகள் எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறதோ அதே அளவு இதன் மூலம் நடக்கும் பொருளாதார குற்றங்களுக்கு அதிகரித்து வருகிறது. ஒரு ஒரு நாளும் தேசிய பங்குச் சந்தை 17 கோடி சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. அதிலும் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பொழுது, தேசிய பங்குச் சந்தை ஒரே நாளில் 40 கோடி சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது. தக்குதல்கள் மட்டுமில்லை Fake செயலிகளில் மூலம் தினம் தோரும் பல அயிரம் கோடி நஷ்டம் எற்படுகிறது. பலர் இது போன்ற Fake அப்களில் முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். இதனை தடுக்க செபி தற்பொழுது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக செபியால் பதிவு செய்யப்பட்ட தரகர் (broker) செயலிகள் மட்டும் ‘டிக்’ மார்க் வேரிபிகேஷன் கூகுளின் Play Store-ல் விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக செபியின் முழுநேர உறுப்பினரான கம்லேஷ் சந்திர வர்ஷினி தெரிவித்துள்ளார். இது அடுத்த 1–2 மாதங்களில் இந்த டிக் Play Store-ல் தெரிகத் தொடங்கும்.

ஏன் இது முக்கியம்?

இப்போது பல மோசடி செயலிகள் உண்மையான நிறுவனங்களைப் போலவே இருக்கும். இந்த டிக் நம்பகமான செயலியை முதலிட்டாலர்கள் சுலபமாக கண்டுபிடிக்க உதவும். Fake செயலிகளிலிருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்காகும்.

எப்படி இந்த ஆப்கள் வேரிப்பை செய்யபடும்:

செபியில் பதிவு செய்யப்பட்ட ப்ரொக்கர்கள் பட்டியலை கூகிளுடன் பகிர்ந்து கொள்ளும், அந்த செயலிகளுக்கு மட்டுமே டிக் மார்க்கு கிடைக்கும். இதுமட்டுமின்றி பதிவுசெய்யப்பட்ட ஆப்களின் பெயர், உரிம எண், டொமைன் போன்றவை பிளே ஸ்டோரில் வேரிப்பை செய்யவேண்டும். ப்ரொக்கர்கள், மியுச்சுவல் பண்டு டிஸ்டிபுயுட்டர் என நடக்கும் Fake நபர்களால் நடக்கும் பண இழப்புகளை தடுக்க, பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகர்களுக்கு SEBIயில் சரிபார்க்கப்பட்ட UPI (“@valid” இல் முடியும் ஐடிகள்) அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடக தளங்களில் ஷேர் மார்கேட் குறித்து தகவல்களை பகிரும் ஆட்வைசார் SEBI செபியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை சில ஆண்டுகளுக்கு முன் கட்டாயமாக்கியுள்ளது. மேலும் ஆட்வைசார் பதிவு செய்யும் வீடியோக்களில் அவர்களின் SEBI பதிவு எண், தொடர்பு விவரங்கள், மொபைல், மின்னஞ்சல் போன்றவை இருக்க வேண்டும்.

இதில் உள்ள சவால்கள்:

டிக் வேரிப்பிகேஷனை யாருக்கு வழங்க வேண்டும் என கூகிள் அவ்வபோழுது கண்கானிக்க வேண்டும். இது SEBIயில் லிருந்து வரும் தகவல் என்வதால் அவர்கள் தரும் தகவல்கள் மிகவும் முக்கியம். ஒரு வேலை இந்த டிக் வெரிப்பிகேஷன் வழங்குவதில் தாமதம் எற்பட்டால் அல்லது இதில் உள்ள சட்ட சிக்கல்களை பயன்படுத்தி Fake ஆப்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

SEBI-யின் இந்த முயற்சி மக்களுக்கு முதலீடுகளின் மீதுள்ள நம்பிக்கையை அதிகரித்து அதில் நடைபெறும் மோசடிகளை குறைக்க உதவும், மேலும் அவர்களில் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு நல்ல முயற்சியாக இது உள்ளது.

Related Posts