சமீபத்தில் மத்திய அரசு சார்பில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும், என ஊடகங்களை சந்திக்கும் பொழுதெல்லாம் பிரதமர் மோடியும், அமைச்சர்களும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று செப். 09 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது நிதியமைச்சகம். இந்த புதிய GST வரி வரும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. அப்படி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்? இதனால் நமக்கு என்ன பயன்?

முதலில் ஒரு ஒரு துறையாக பிரிக்கலாம். மருத்துவத் துறையில் புற்றுநோய் மற்றும் சில அரிய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான 12% GST முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. Thermometer, Medical Oxygen, பரிசோதனைப் பொருள்கள், Spectacles போன்றவற்றின் மீதான GST 12% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துக்கு பிறகு முக்கிய மாற்றம் தினசரி பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் மீதுள்ள ஜிஸ்டி குறைக்கபட்டுள்ளது. பால், பன்னீர், வெண்ணெய், நெய், குழந்தைகளுக்கான Feeding Bottle, Napkins, Daiapers, Snacks, Namkeens, இதுமட்டுமின்று தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு GST 12% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் Hair Oil, Shampoo, Tooth paste போன்ற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களுக்கு GST 18% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தினசரி பயன்படுத்தும் எழுத்துப்பொருட்கள் – நோட்டுப் புத்தகங்கள், வரைபடங்கள், Pencil , Rabber, Crayons போன்றவற்றின் மீது GST முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.


தற்போது மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வரும் Individual health insurance மற்றும் life insurance மீதான GSTயும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இது தனிநபர் வருமானத்தில் நன்மை ஏற்படுத்தும்.
அடுத்து ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இது எல்லோரும் எதிர்பார்த்த துறை இதுதான். ஆட்டோ, பைக், சரக்கு வாகனங்கள், கார், மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு GST 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் வாங்கினால் சுமார் ரூ.1 லட்சம் வரை, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பைக் வாங்கினால் சுமார் ரூ.15,000 – ரூ.18,000 வரை விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
சில ஆடம்பர பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு GST அதிகரிக்கப்பட்டுள்ளது. 350cc-க்கு மேற்பட்ட பைக்குகள், சொகுசு கார்கள், தனிநபர் பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிகரெட், பான் மசாலா, கார்பனேற்ற பானங்கள் ஆகியவற்றின் மீதான வரி 28% லிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதார விளைவுகள்
இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். குறிப்பாக Lower Middle Class மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு GST குறைப்பு சேமிப்பையும், செலவையும் அதிகரிக்கும். ஆனால் இந்த GST வரி குறைப்பால் அரசுக்கு ரூ.93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.45,000 கோடி வருவாய் கிடைக்கும். இருந்தும் மொத்தத்தில் ரூ.48,000 கோடி நஷ்டம் ஏற்படும். ஆனால் பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது – மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால், அந்தப் பணம் மீண்டும் பொருளாதாரத்திற்குள் திரும்பும். எனவே அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படாது.









