இந்தியாவில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் வெள்ளி பாதுகாப்பான முதலீடு என்வதால் அதனை வங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகினறனர். உலகிலேயே இந்தியப் பெண்களிடம் தான் அதிக தங்கம் உள்ளது. தங்கத்தை எவ்வளவு விரும்புகிறார்களோ, அதே அளவில் வெள்ளி மோதிரம், கொலுசு போன்ற நகைகளையும் விரும்பி வாங்குகின்றனர். தங்கம் விலை அதிகமாக இருப்பதால் எளிய மக்கள் வெள்ளி நகைகளை வாங்குகின்றனர்.

தங்கத்தின் தூய்மையைப் பொருத்து 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT என பிரிப்பார்கள். அதற்கேற்ப விலையும் மாறுபடும். இதற்குப் பெயர் ஹால்மார்க்கிங். இதைப் பார்த்தே நாம் தங்கத்தை வாங்குகிறோம். தங்கம் போலவே வெள்ளிக்கும் தனித்தனி தரம் உண்டு. அவை: 800, 835, 900, 925, 970 மற்றும் 990. இப்போது வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் கட்டாயமாகியுள்ளது. இது வரும் செப்டம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். நீங்கள் வாங்கும் வெள்ளியில் 6 இலக்க HUID குறியீடு இருக்கும். இந்த குறியீடு, நகைகள் BIS தரநிலைகளின்படி சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதை குறிக்கிறது.
நீங்கள் வெள்ளி நகைகள் வாங்கும் தரம் குறித்து ஹால்மார்க் முத்திரை மூலம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அதில் எவ்வளவு கலப்படம் உள்ளது என்பதும் தெரியும். ஹால்மார்க் இருந்தால், போலி நகை மோசடி நடக்கும் அபாயம் இருக்காது. நாம் வைத்திருக்கும் நகையை விற்கும்போது அன்றைய விலைக்கு விற்க ஹால்மார்க் உதவும்.
இதில் நமக்கு ஒரு கேள்வி எழும் நாம் வைத்திருக்கும் பழைய வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் தேவைப்படுமா? நீங்கள் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை அவசியமில்லை. ஆனால், நீங்கள் விரும்பினால், உங்கள் வெள்ளி நகைகளை BIS மையங்களில் கொடுத்து, கட்டணம் செலுத்தி ஹால்மார்க் முத்திரை பெற்றுக் கொள்ளலாம்.









