இந்தியாவில் பல ஆண்டுகளாக காசோலை தங்கள் அக்கவுண்டில் பணமாக மாற்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் நாளை முதல் இதில் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற உள்ளது.
1980-களில் Cheque-களை வங்கியில் Deposit செய்தால், நமது வங்கிக்கு வர குறைந்தது ஏழு நாட்கள் ஆகும். 2000-க்கு பிறகு அது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இதுவும் அதிக நாட்களாக இருந்ததால், 2008-ல் ஒரே நாளில் முடிவடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அக்டோபர் 4 முதல் அனைத்து வங்கிகளும் காசோலைகளை ஒரு சில மணி நேரங்களில் கிளியர் செய்ய வேண்டும். இது, காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை எளிமையாகவும், விரைவாகவும் மாற்றும். இதன் மூலம், இந்தியாவின் வங்கி துறை காசோலை கிளியர் செய்யும் நேரத்தில் “7 நாட்கள் → 3 நாட்கள் → 1 நாள் → இப்போது சில மணி நேரம்” என மாற்றம் அடைந்துள்ளது.
புதிய நடைமுறை எப்படி செயல்படும்?
வங்கி அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகளில் காசோலை டெபாசிட் செய்யலாம். அந்த காசோலை உடனடியாக ஸ்கேன் செய்து கிளியர் செய்யப்படும். இதன் மூலம் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் பயனாளியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். ஒருவேளை மாலை 7 மணிக்குள் வங்கி காசோலையை பரிசீலிக்கவில்லை என்றால், காசோலை தானாகவே கிளியர் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் வைக்கப்படும்.
இந்த மாற்றம் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும். அவர்கள் நேரத்தைச் சேமித்து விரைவில் பணத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையும்.









