இந்தியாவில் இளைஞர்கள் பெரும்பாலும் மொபைல் போன்களை மாத தவணை (EMI) முறையில் வாங்குகிறார்கள். ஒரு புது மாடல் போன் வந்தாலே போதும், EMI போட்டாவது வாங்கிவிடுவோம். இப்படி EMI வாங்குவதில் இரண்டு வகைகள் உள்ளன – வட்டியுடன் EMI மற்றும் No-Cost EMI. இதில், No-Cost EMI மிகவும் பிரபலமாக உள்ளது, காரணம் எந்தவித வட்டியும் இல்லாமல், பொருளின் விலை மட்டும் தவணையாக செலுத்தினால் போதும்.
முத்தூட் பைனான்ஸ், பஜாஜ் போன்ற Non-Banking Financial Companies (NBFCs) தாங்கள் வழங்கும் கடன்களில் 85% மொபைல் EMI ஆகவே இருக்கிறது என தெரிவித்துள்ளன. ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒரு லட்சத்திற்கும் குறைவான விலை மொபைல் வாங்கும் பலர் EMI-யை நேரத்துக்கு செலுத்துவதில்லை என CRIF தெரிவித்துள்ளது.
இதனை சரி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அதாவது, மொபைல் போனை EMI-யில் வாங்கும் போது அதில் ஒரு app பதிவேற்றப்படும். இதன் மூலம் EMI-யை செலுத்தாவிட்டால், அந்த app உங்கள் மொபைல் போனை முடக்கிவிடும்.
ஆனால் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. காரணம், அந்த app மூலமாக தனிநபர் தகவல்கள் கசியும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.









