வணிகம்

பார்மா நிறுவனங்களுக்கு 100% வரி விதிப்பு: இப்போதாவது விழித்துக் கொள்ளுமா

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பின் நோக்கம், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்குள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டும் என்பது தான்.

அமெரிக்கா 2024-ஆம் ஆண்டில் 233 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்தது. இந்த நிலையில், இந்த வரிவிதிப்பு காரணமாக மருந்துகளின் விலையை இரட்டிப்பாக்கும். இது அமெரிக்கவில் உள்ள சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கலாம்.

இந்தியா பாதிக்கப்படுமா?

உலகளவில் ஜெனரிக் மருந்து (பொதுப் பெயர் மருந்து) விநியோகத்தில் 20%-மும் மற்றும் தடுப்பூசிகளில் 60%-த்திற்கு அதிகமான பங்கு வகிக்கிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவை “Pharmacy of the World” என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் 31% (அதாவது கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர்) அமெரிக்காவிற்கே செல்கிறது. எனவே, இந்தியாவின் மருந்துத் துறையில் அமெரிக்க சந்தை மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. Sun Pharma, Lupin, Dr. Reddy போன்ற நிறுவனங்கள் மலிவு விலை ஜெனரிக் மருந்துகளை வழங்குகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டு மருந்துகளை விட இந்த நிருவனங்களின் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

இந்த புதிய வரி, இந்திய மருந்து ஏற்றுமதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அங்குள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்படலாம். குறிப்பாக இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என மருந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பாதிப்புகள் இருந்தாலும், இந்திய மருந்து விநியோக நிறுவனங்கள் புதிய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உண்டு. இந்தியா தனது ஏற்றுமதி சங்கிலியை மாற்றுவதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனாலும், உலக மருந்து விநியோக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு என்று தனிதன்மை எப்போழுதும் உண்டு.

Related Posts