இப்போது நம் வாழ்க்கை ரொம்ப வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. சமையலுக்கு உப்பு இல்லை என்றாலோ அல்லது டீ போடுவதற்குப் பால் இல்லை என்றாலோ நமக்கு டென்ஷன் ஆகிவிடும். ஆனால், இப்போது அவசரத் தேவைக்கான இந்தப் பொருட்களும் சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் வசதி வந்துவிட்டது.
அமேசான், நகரங்களில் பல இடங்களில் சின்ன சின்னக் கடைகள் (micro-fulfillment centres) அமைத்துள்ளது. அதாவது, பொருட்கள் நம் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும். ஒருவர் ஆர்டர் செய்தால், அங்கிருந்து உடனே டெலிவரிக்கு அனுப்பிவிடுவார்கள். அதனால்தான், இந்த வேகமான டெலிவரி சாத்தியமாகிறது.
“இப்போதே வேண்டும்” – இதுதான் மக்களின் புது எதிர்பார்ப்பு. முன்பெல்லாம் “நாளைக்கு வந்தால் போதும்” என்று இருந்த நிலை மாறி, இப்போது “உடனே வேண்டும்” என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இந்த வேகமான டெலிவரியைத்தான் Zepto, Blinkit, Swiggy Instamart போன்ற நிறுவனங்கள் 10-15 நிமிடங்களில் டெலிவரி செய்து மக்களைப் பழக்கிவிட்டன. இதைப் பார்த்த அமேசான், தாமதிக்கக் கூடாது என்று “Amazon Now” என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்த வேகமான சேவை, டெலிவரி வேலைகளை அதிகரித்துள்ளது. டெலிவரி செய்யும் நபர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதோடு, பெரிய நிறுவனங்களுக்கும் புதிய முதலீடுகள் வருகின்றன. இதில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்றால் அன்றாடம் தேவைப்படும் மளிகைப் பொருட்கள், டூத் பிரஷ், ஷாம்பு, பேஸ்ட், பால், உப்பு போன்ற பல பொருட்கள் 10 நிமிடங்களுக்குள் வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
இது நம்முடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. முன்பெல்லாம் ஆன்லைனில் வாங்கினால் “விலை குறைவா கிடைக்கும்” என்று நினைத்தோம். ஆனால், இப்போது “உடனே தேவை என்றால் உடனே கிடைக்கும்” என்று நினைக்கிறோம்.








