வணிகம்

KICL தலைவரின் கோவை விசிட்…!

500 ரூபாய்க்கு தரமான காலணிகளை Zodiz நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் கோவையை மையமாக வைத்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆக. 04 ஆம் தேதி zodiz நிறுவனம் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்பரேஷன் லிமிடெட் (KICL) உடன் இணைந்தது.

இந்த இணைப்பிற்கு பிறகு கோத்தாரி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் தலைவர் ஜே. ரஃபிக் அகமது முதல்முறையாக zodiz நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவருடன் KICL நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் சிவராமன், காலணி உற்பத்தி துறையின் தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் என். மோகன் ஆகியோரும் வருகை புரிந்தனர். இவர்களுக்கு zodiz பிராண்ட் நிறுவனர் முஸ்தபா யாசின் தலைமையில் zodiz அலுவலக ஊழியர்கள் வரவேற்பு வழங்கினர்.

முதலில் சீனியர் டீமிடம் ஆலோசனை நடத்திய பின்னர், புதிய தயாரிப்புகளை மேற்கொள்ளும் வடிவமைப்பு குழு அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் இந்தியாவெங்கும் உள்ள zodiz, jeetlo நிறுவனத்தை சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் மற்றும் கோயம்பத்தூர் அலுவலக ஊழியர்கள் ஆகியோருடன் கோத்தாரி நிறுவன தலைவர் கலந்துரையாடினர். அப்பொழுது zodiz நிறுவனம் கோத்தாரி குழுவில் இணைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின் zodiz ப்ராண்ட் உற்பத்தி செய்யும் webond footwear private limited தொழிற்சாலையை பார்வையிட்டார்.

 

Related Posts