உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தினமும் பார்க்கும் ஓடிடிகளில் ஒன்று Netflix. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்கள், வெப்சீரிஸ், டாக்குமெண்டரி என பல்வேறு வகைகளில் மக்களை கவர்ந்த Netflix இப்போது பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய “Dead End: Paranormal Park” என்ற அனிமேஷன் வெப்சீரிஸ் Netflix-இல் வெளியானது. குழந்தைகள் பார்க்கும் இந்த தொடரில் LGBTQ கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக பல குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து ஹாமிஷ் ஸ்டீலுக்கும் எலான் மஸ்க்கும் முரண்பாடுகள் இருந்தன.
சமீபத்தில், டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர் மற்றும் நெருங்கிய நண்பரான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டபோது, “Dead End: Paranormal Park” வெப்சீரிஸின் இயக்குனர் ஹாமிஷ் ஸ்டீல், “சார்லி கிர்க் கொலைசெய்யப்பட்டது சரியே; அவர் ஒரு Nazi” என கூறிய கருத்து, அமெரிக்க மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அதே நபரை Netflix தனது நிறுவனத்தில் சேர்த்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சோசியல் மீடியாக்களில் பல எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் இதுகுறித்து எலான் மஸ்க் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “உங்கள் குழந்தைகளின் நலனுக்காக Netflix சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யுங்கள்” எனக் கூறினார். அவர் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே #CancelNetflix என்ற Hastags மின்னல் வேகத்தில் Trend ஆனது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சப்ஸ்கிரிப்ஷனை Cancel செய்த ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்தனர்.
அதன் விளைவாக, கடந்த 48 மணி நேரத்தில் Netflix நிறுவனத்தின் பங்கு விலை மிகபெரிய அளவில் சரிந்தது. சுமார் 25 பில்லியன் டாலருக்கும் அதிக இழப்பு எற்பட்டுள்ளது, இதனால் Netflix நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.









