தொழில்நுட்பம்

இந்தியாவை குறிவைக்கும் டாப் AI நிறுவனம்

AI துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் Anthropic நிறுவனம், Tokyo-க்கு பிறகு தனது இரண்டாவது அலுவலகத்தை பெங்களுருவில் திறக்கவுள்ளது.

பல ஆயிரம் இன்ஜினியர்களின் வேலை பறிபோக இந்த நிறுவனம் காரணம் என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள Claude AI, ஒரு நிறுவனம் இயங்க தேவையான பல பணிகளை தானியங்கிமயமாக்குமாம். குறிப்பாக, சட்ட விளக்கங்கள், சட்ட ஒப்பந்தங்கள், விற்பனை விவரம், ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்துவது போன்ற பணிகள், ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்வது, நிதி மாதிரிகள் உருவாக்குவது போன்ற வேலைகளையும் கச்சிதமாக செய்கிறதாம். இந்த சேவைகளுக்காக ஐடி நிறுவனங்கள் பல லட்சம் சம்பளத்திற்கு பலரை வைத்து செய்து தரும் நிலையில், சில நிமிடங்களில் Anthropic AI செய்து முடிக்கிறது.

இந்த சூழலில் தான் இந்த நிறுவனம் பெங்களூரில் தனது இரண்டாவது அலுவலகத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னனு பார்த்தால், உலகளவில் Claude AI தளத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கு. உலகளவில் இந்த AI பயன்பாட்டில் ஒரு பெரிய பகுதி இந்தியாவில் இருந்து நடக்கிறதாம். இந்த Claude AI காரணமாக வேலைகள் குறையும் என்ற பயம் இருந்தாலும், இதன் மூலம் இந்தியா AI வளர்ச்சியில் பெரிய உயரத்தை அடையவும் வாய்ப்பு இருக்கு.

Infosys சமீபத்தில் இந்த நிறுவனத்துடன் இணைந்து தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற துறைகளை மேம்படுத்த புதிய AI தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறதாம். இதேபோல் பல பெரிய நிறுவனங்களும் Claude-ஐ பயன்படுத்த தொடங்கிட்டாங்க. Air India தனது செயல்பாடுகளை வேகமாக மேம்படுத்த Claude AI பயன்படுத்துகிறது. CRED, Cognizant ஆகியவை ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு Claude AI உதவியை வழங்குகின்றன. Razorpay-வும் மோசடிகளை கண்டறிய இந்த AI-யை பயன்படுத்துகிறதாம்.

என்னதான் இந்திய இளைஞர்கள் திறமையுடன் இருந்தாலும், AI-யை சரியாக கற்றுக் கொண்டு பயன்படுத்தும் போது மட்டுமே அவர்கள் தங்கள் துறைகளில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

Related Posts