பொது

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்: சச்சினின் சாதனையை முறியடித்த இளம் புயல்!

அக்டோபர் 10, 2025. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இளம் ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் 173 ரன்கள் குவித்தார். மேலும், இந்திய அணியின் ஸ்கோரை 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் என்ற வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் நிதானமாகப் பேட்டிங் செய்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வலுவான பேட்டிங் செய்தார். அவர் அடித்த ஏழாவது சதத்தின் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 24 வயதுக்குட்பட்ட வீரர்கள் செய்த சாதனைகள் பட்டியலில் ஒரு மகத்தான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சச்சினின் சாதனையை முறியடித்தார்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வலுவாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். இந்த சதத்தையும் சேர்த்து இதுவரை அவர் 7 முறை சதம் அடித்துள்ளார். இதன் மூலம், 24 வயதை அடைவதற்கு முன் ஐந்து முறை 150-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் 4 முறை 150+ ரன்கள் எடுத்து இந்த இந்திய சாதனையில் முன்னணியில் இருந்தார். மேலும் இந்த உலகச் சாதனையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டான் பிராட்மேன் (8 முறை) மட்டுமே ஜெய்ஸ்வாலை விட முன்னணியில் உள்ளார்.

கிரேம் ஸ்மித்துக்கு இணையாக…

24 வயதை அடைவதற்கு முன் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த துவக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்தார். அவர் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித்துக்கு இணையாக முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Related Posts