தொழில்

உலகின் மிகப்பெரிய ஆயில் ரீபைனரி இந்தியாவில்.. மோடியின் தொலைநோக்கு திட்டம்!

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கோவாவில் இன்று இந்திய எரிசக்தி மாநாடு 2026 இன்று முதல் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டை, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி துவக்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், “இந்திய – ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உற்பத்தி மற்றும் சேவைத் துறையை ஊக்குவிக்கும். இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும்.

இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. எரிசக்தித் துறையில் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும்.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு எரிசக்தித் துறையை இந்தியா உருவாக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கிறது. மலிவு விலையில் சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கான ஏற்றுமதியையும் அதிகரித்து வருகிறது” என்றார்.

Related Posts