தொழில்

சென்னையில் புதிய ஷோரூமை திறந்தது Rolls-Royce!

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் (Rolls-Royce Motor Cars), சென்னையில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

இதன் திறப்பு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிராண்ட் இயக்குநர் ஜூலியன் ஜென்கின்ஸ், இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதும் தனித்துவமான சொகுசு கார்களை விரும்புவதாகவும், இந்த புதிய ஷோரூம் இந்திய சந்தையின் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Rolls-Royce

2013ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வரும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம், தற்போது சென்னை மற்றும் தென்னிந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தனது ஷோரூமை திறந்துள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நிறம், வடிவமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்களைத் தேர்வு செய்து, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொகுசு கார்களை வடிவமைத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் அதிக வளர்ச்சி கண்ட சந்தையாக இந்தியா திகழ்ந்தது. இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts