ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின் மிஷன் இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சிவராஜா ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2021 ஜனவரியில் StartupTN-இல் இணைந்தபோது, தமிழ்நாடு முழுவதும் உலகத் தரத்திலான ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினேன்.
2021ஆம் ஆண்டில் 2,032 ஆக இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 14,700 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள் பெண்களால் வழிநடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு காலத்தில் வாய்ப்புகள் குறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த ஒருவர், இன்று தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியிருப்பது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.









