பொது

உலக்கோப்பை வென்ற இடத்தில்… ஸ்மிருதிக்கு காதலன் கொடுத்த ரொமான்டிக் சர்ப்ரைஸ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், 2025 ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் வெற்றியின் முக்கிய அங்கமுமான ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். இவர் தனது சக வீராங்கனைகளான ஜெமிமா ரொட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா படில், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோருடன் இணைந்து ஒரு நடன ‘ரீல்’ வீடியோ மூலம் இந்த செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த வீடியோவின் முடிவில் அவர் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்து இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதி செய்தார்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற மும்பை டி. ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அவரது காதலன் ஸ்மிருதி மந்தனாவின் கண்களை கட்டியபடி அழைத்து வந்து, அங்கு அவருக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை ப்ரப்போஸ் செய்துள்ளார். இந்த உணர்வுபூர்வமான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளன.

Related Posts