பொது

உலகப் புகழ்பெற்ற ஹலோ கிட்டி DIY-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃபன்ஸ்கூல்

MRF குழுமத்தின் ஒரு அங்கமும், இந்தியாவின் முன்னணி பொம்மை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஃபன்ஸ்கூல் இந்தியா, உலகப் புகழ்பெற்ற ஹலோ கிட்டி மற்றும் அதன் நண்பர்கள் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய DIY (Do It Yourself) கைவினைப் பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1974-ல் யூகோ ஷிமிசுவால் உருவாக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற கற்பனைக் கதாபாத்திரமான ஹலோ கிட்டி, தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் குழந்தைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இந்தக் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஃபன்ஸ்கூல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த DIY தயாரிப்புகள், குழந்தைகளின் மொபைல் நேரத்தைக் குறைத்து, அவர்களின் படைப்பாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஹலோ

இதுகுறித்து ஃபன்ஸ்கூல் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கே.ஏ. ஷபீர் கூறுகையில்,

“ஹலோ கிட்டி உலகம் முழுவதும் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதாபாத்திரங்களில் ஒன்றாகும். இந்த DIY தயாரிப்புகள் வெறும் விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல; குழந்தைகளின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எங்கள் முயற்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்,” என்றார்.

மேலும், ஹலோ கிட்டி பிராண்டின் கீழ் பல புதிய DIY தயாரிப்புகளையும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஃபன்ஸ்கூல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Posts