வெற்றிமாறன் இயக்கும் STR 49 திரைபடம் ‘வடசென்னை’ திரைப்படத்துடன் தொடர்புடையதாகவும், இதற்கு 20 கோடி கேட்டு தனுஷ் நோட்டிஸ் அனுப்பியதாக பரவிய செய்திக்கு வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் STR 49 படத்துக்கான ப்ரொமோ ஷூட் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், நெல்சன், சிம்பு ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் சிம்பு, ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் நடித்த கேட்டப்பில் இருப்பது போன்று இருந்ததால், வடசென்னை 2 படத்தில் தனுஷை ஓரம் கட்டிவிட்டு சிம்பு நடிக்கவுள்ளார் என தகவல் பரவின. மேலும், தனுஷ் – வெற்றிமாறன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், கோபத்தில் தனுஷ் 20 கோடி Copyrights கட்டணம் கேட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வடசென்னை’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரின் கேரியரையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற படமாக இது அமைந்தது. தனுஷின் நடிப்பை பார்த்து, ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ், அவருக்கு ‘The Gray Man’ படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்கள்.
இந்த நிலையில், பரவும் தகவல்கள் உண்மையா?… வதந்தியா?… என்ற குழப்பம் ரசிகர்களிடம் இருந்தது. இதற்காக வீடியோ வெளியிட்டு வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்: “தொழில்நுட்ப காரணங்களும், மிருகங்களின் பாதுகாப்பு போன்றவற்றால் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், சிம்புவை வைத்து STR 49 எனும் புதிய படத்தை தொடங்கினேன். இந்த படம் ‘வடசென்னை 2’ அல்ல. தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் ‘வடசென்னை 2’. ஆனால், STR 49 கதை, வடசென்னை உலகத்தில் நடைபெறும் ஒரு துணைக்கதை. அதே காலகட்டத்தில் நிகழ்வதால், சில கதாபாத்திரங்கள் இதில் மீண்டும் வரலாம். ‘வடசென்னை’ படத்தின் முழு உரிமை தனுஷின் wunderbar films நிறுவனத்திடம் உள்ளது. ஆகவே, அதனை சார்ந்த எந்த விஷயத்திற்கும் அவரிடம் அனுமதி பெறவேண்டும். இதற்காக பணம் கேட்பதில் தவறில்லை. ஆனால், தனுஷிடம் பேசியபோது, ‘உங்களுக்கு என்ன நல்லதா இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். எனக்கு பணம் வேண்டாம், எனது அணியினரிடம் பேசி உடனே தடையில்லா சான்றிதழ் கொடுக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.

லோகேஷின் எல்.சி.க்கு பிறகு தமிழ் சினிமாவில் Cinematic Universe Concept அதிகரித்துள்ளது. அனைத்து இயக்குனர்களும் அந்த டிரண்டுக்கு மறியுள்ளன. அந்த வகையில் வெற்றிமாறனும் அதில் இனைத்துள்ளர். இதனால் சிம்பு – தனுஷ் இருவரும் ஒரே படத்தில் ஒன்றுகூடும் வாய்ப்பு இருக்கிறதா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “அடுத்த ஆண்டு வடசென்னை 2 படப்பிடிப்பு தொடங்கும்” என தனுஷ் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.








